இந்தியா மீது 500% வரி விதிக்க அமெரிக்கா திட்டம்? அமைச்சர் ஜெய்சங்கர் பதில் என்ன?

காணொளிக் குறிப்பு, இந்தியா மீது 500% வரி விதிக்க அமெரிக்கா திட்டம்? இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் பதில் என்ன?
இந்தியா மீது 500% வரி விதிக்க அமெரிக்கா திட்டம்? அமைச்சர் ஜெய்சங்கர் பதில் என்ன?

இந்தியா, சீனா உள்ளிட்ட ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

குவாட் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் இதைப்பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், "செனட்டர் லின்ட்சே கிரஹாமின் மசோதாவை (வரி விதிப்பு குறித்த மசோதா) பொறுத்தவரை, அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்படும் எந்தவொரு மாற்றமும் எங்கள் நலனில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். எனவே செனட்டர் கிரஹாமுடனும், தூதரகத்துடனும், தூதருடனும் தொடர்பில் இருந்தோம். எரிசக்தி பாதுகாப்பு குறித்த எங்கள் கவலைகள் மற்றும் நலன்கள் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே அந்த சவாலை எழும் போது, அது நேர்ந்தால் அதனை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்றார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு