சிறுத்தையை பூட்டி சிறை வைத்த பெண் - கர்நாடகாவில் துணிகர சம்பவம்

காணொளிக் குறிப்பு, வீட்டுக்குள் சிறை வைக்கப்பட்ட சிறுத்தை
சிறுத்தையை பூட்டி சிறை வைத்த பெண் - கர்நாடகாவில் துணிகர சம்பவம்

கர்நாடகாவில் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையை பெண் ஒருவர் அறைக்குள் சிறை வைத்த சம்பவம் நடந்தேறியுள்ளது. ஜிகானி பகுதியில் உள்ள குண்டாலா ரெட்டி லேஅவுட் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 3ம் தேதி அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த சிறுத்தை வாயில் வழியாக அறைகளைத் தாண்டி படுக்கையறைக்குள் புகுந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தாலும் சமயோசிதமாக செயல்பட்ட அந்த வீட்டிலிருந்த பெண் படுக்கையறையில் புகுந்திருந்த சிறுத்தையை உள்ளே வைத்து கதவைப் பூட்டினார்.

இதனால் சிறுத்தை வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டது. தகவலறிந்து சென்ற வனத்துறையினர் வீட்டின் வாயிலில் சிறுத்தைக்காக கூண்டு அமைத்தனர். பின்னர் சிறுத்தை இருக்கும் இடத்தை அடையாளம் கண்ட பின் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்தனர்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு