பென்குயின்கள், நீர்நாய்கள் வசிக்கும் தீவுக்கு கூட டிரம்ப் வரி விதித்தது ஏன்?
பென்குயின்கள், நீர்நாய்கள் வசிக்கும் தீவுக்கு கூட டிரம்ப் வரி விதித்தது ஏன்?
ஹெர்ட் மற்றும் மெக் டொனால்ட்ஸ் தீவில் பென்குயின்களும், நீர்நாய்களும்தான் வசிக்கின்றன. இங்கு மனிதர்களே கிடையாது.
ஆனால், இந்த தீவுக்கும் டிரம்ப் 10% வரி விதித்திருக்கிறார். அன்டார்டிகா அருகே தெற்குப் பெருங்கடலில் உள்ள இந்த பகுதிகள் ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமானவை. ஆஸ்திரேலியாவில் இருந்து ஆயிரக்கணக்கான கிமீ தொலைவில் இவை உள்ளன. எனினும், ஆஸ்திரேலியாவுக்கு விதிக்கப்பட்ட வரி, இந்தத் தீவுகளுக்கும் பொருந்துகிறது. கடந்த ஆண்டு இந்தத் தீவுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எந்த வர்த்தகமும் இல்லை என அமெரிக்க தரவுகள் கூறுகின்றன.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



