டொனால்ட் டிரம்ப்: அமெரிக்க அதிபராவது இந்தியாவுக்கு ஏற்படுத்தும் சிக்கல்கள் என்ன?

காணொளிக் குறிப்பு,
டொனால்ட் டிரம்ப்: அமெரிக்க அதிபராவது இந்தியாவுக்கு ஏற்படுத்தும் சிக்கல்கள் என்ன?

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2017 - 2021 காலகட்டத்தில் அமெரிக்காவின் 45வது அதிபராக டிரம்ப் பதவி வகித்தார்.

அவருடைய கொள்கைகள் உலகம் முழுவதும் அறியப்பட்டவைதான். மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசாங்கம் டிரம்பை பல முனைகளில் கையாள்வதில் அனுபவம் பெற்றுள்ளது.

நரேந்திர மோதியை தனது நண்பர் என்று பலமுறை குறிப்பிட்டுள்ள டிரம்ப், அதே நேரத்தில் இந்தியாவின் கொள்கைகளையும் விமர்சித்து வருகிறார். இந்தத் தேர்தலில் பிரசாரத்தின்போது பிரதமர் மோதியின் பெயரை டிரம்ப் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)