காணொளி: பாகிஸ்தான் பாதுகாப்புக்கு ஆப்கன் தாலிபனால் பெரும் அச்சுறுத்தல் இருக்கிறதா?
காணொளி: பாகிஸ்தான் பாதுகாப்புக்கு ஆப்கன் தாலிபனால் பெரும் அச்சுறுத்தல் இருக்கிறதா?
ஆப்கானிஸ்தானில் உள்ள தெஹ்ரிக்-இ-தாலிபன் அமைப்பின் பாகிஸ்தான் தளபதிகள், டெலிகிராம் மூலம் தொடர்புகொண்டு இஸ்லாமாபாத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்துமாறு கேட்டுக்கொண்டதாக தற்கொலை தாக்குதலை நடத்தியவரை 'வழிநடத்தியவரிடம்' மேற்கொண்ட விசாரணையின் போது தெரியவந்ததாக பாகிஸ்தான் அரசு கூறுகிறது.
இஸ்லாமாபாத் தாக்குதலில் தொடர்புடைய வலையமைப்பை ஆப்கானிஸ்தானில் உள்ள டிடிபி-இன் உயர் தலைமை ஒவ்வொரு அடியிலும் வழிநடத்துவதாக பாகிஸ்தான் அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
சட்டவிரோதமான அமைப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ள டிடிபி அமைப்பு, இந்தத் தாக்குதலுக்கு இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விரிவாக காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



