You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையின் கதை உங்களுக்கு தெரியுமா?
உலகின் மிகச் சிறந்த கட்டடங்களில் ஒன்றான வெள்ளை மாளிகைப் பற்றிய சில தகவல்களை இதில் பார்ப்போம்.
அமெரிக்காவின் முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் 1791 ஆம் ஆண்டில் இந்த இடத்தை தேர்வு செய்தார். ஆனால், அவர் அதில் வசிக்கவில்லை.
இதனை வடிவமைப்பதற்கு நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் ஐரீஷ் கட்டடக் கலைஞரான ஜேம்ஸ் ஹோபன் வெற்றி பெற்றார். இதனை கட்ட 8 ஆண்டுகள் ஆனது.
1814 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் படைகள் இதனை தீ வைத்து எரித்தனர். பின்னர் மீண்டும் கட்டப்பட்ட வெள்ளை மாளிகை எதிர்ப்பின் சின்னமாக பார்க்கப்பட்டது. முதலில் அதிபர் மாளிகை அல்லது அதிபர் இல்லம் என்றே இது அழைக்கப்பட்டது.
வெள்ளை மாளிகை என்று செல்லமாக அழைப்பட்டு வந்த நிலையில், 1901ஆம் ஆண்டில் இந்த பெயரையே அதிகாரப்பூர்வமானதாக மாற்ற முடிவு செய்தார் அப்போதைய அதிபர் தியோடோர் ரோஸ்வெல்ட் (Theodore Roosevelt)
வெள்ளை மாளிகையில் 132 அறைகள், 35 குளியலறைகள் உள்ளன. இதுபோக, 412 கதவுகள், 147 ஜன்னல்கள் உள்ளன.
ஓவல் அலுவலகம் பிரபலமான அறையாக உள்ளது. அதேநேரம், அமெரிக்க முதல் குடும்பத்தின் அதிகாரப்பூர்வமாக உள்ள இதில், வேறு சில கேளிக்கை அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. திரையரங்கம், டென்னிஸ் கோர்ட் கூட இருக்கிறது.
உலகிலேயே மிகவும் பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக வெள்ளை மாளிகை உள்ளது. குண்டு துளைக்காத ஜன்னல்கள், அணு தாக்குதலை எதிர்கொள்ள பதுங்கு குழி, விமானங்கள் பறக்க தடை போன்றவை இதில் அடங்கும்.
மேலும் சில சுவாரசிய தகவல்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)