You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜப்பானில் நிலநடுக்க பாதிப்புகளை காட்டும் ட்ரோன் காட்சி
ஜப்பான் நிலநடுக்க பாதிப்புகளை இந்த ட்ரோன் காட்சிகள் விவரிக்கின்றன.
ஜப்பானில் ஜனவரி 1-ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 48 பேர் உயிரிழந்தனர். பல இடங்களில் கட்டடங்கள், சாலைகள் சேதமடைந்துள்ளன.
ஜப்பானில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், ஜப்பான் கடல் பகுதிகளில் விடுக்கப்பட்டிருந்த அனைத்து ‘சுனாமி எச்சரிக்கைகளும்’ தளர்த்தப்பட்டுள்ளன.
நிலநடுக்கம் மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட தீயால் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
நிலநடுக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நோட்டோ கடற்கரையோர பகுதியில் ரயில், படகு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஆயிரக்கணக்கிலான மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஜப்பான் ராணுவம் உணவு, குடிநீர், போர்வைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கிவருகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)