"ஒரே பையன் சார்... " போட்டோவை பார்த்து கதறிய தந்தை

"ஒரே பையன் சார்... " போட்டோவை பார்த்து கதறிய தந்தை

சிவசங்கர் ஜானாவுக்கு இரண்டு மகன்கள். ஒரு மகன் சிறுவன். இன்னொரு மகனான டெவிட் ஜானாவுக்கு 27 வயது.

தந்தை, மகன் இருவருக்குமே சரியான வேலை இல்லாத நிலையில், சென்னையில் வேலை தேடலாம் என கோரமண்டல் எக்ஸ்பிரசில் புறப்பட்டார் டெவிட் ஜானா.

டெவிட் ஜானாவுடன் தானும் வருவதாகச் சொன்னார் சிவசங்கர். ஆனால், சென்னைக்குச் சென்று வேலைதேடி, ஒரு சிறிய வீட்டையாவது வாடகைக்கு எடுத்துவிட்டு, தன் தந்தையை அழைத்துக் கொள்வதாகக் கூறி புறப்பட்டார் டெவிட் ஜானா.

இப்போது, அந்த மகனின் உடலை வாங்க வெயில் கொளுத்தும் ஒரு நாளில், பரிச்சயமில்லாத ஒரு ஊரில், பிணவறை முன்பாக அமர்ந்திருக்கிறார் சிவசங்கர் ஜானா. (முழு தகவல் காணொளியில்)

செய்தியாளர் - முரளிதரன் காசி விஸ்வநாதன்

ஒளிப்பதிவு - மதன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: