காணொளி: காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்; ''குறைந்தது 32 பேர் பலி"

காணொளிக் குறிப்பு, காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்; ''குறைந்தது 32 பேர் பலி"
காணொளி: காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்; ''குறைந்தது 32 பேர் பலி"

சனிக்கிழமை காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய வான் வழி தாக்குதல்களில் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் பெண்களும் குழந்தைகளும் அடங்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இடம்பெயர்ந்தோரின் கூடாரம் ஒன்று தாக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

வெள்ளிக்கிழமை ஹமாஸ் ஒப்பந்தத்தை மீறியதாக கூறி, அதற்கு பதிலடியாக பல தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.

கடந்த ஆண்டு போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததிலிருந்தே, இஸ்ரேலும் ஹமாஸும் ஒருவரையொருவர் போர்நிறுத்தத்தை மீறுவதாக குற்றம் சாட்டி வருகின்றன.

ஹமாஸ் இந்தத் தாக்குதல்களைக் கண்டித்துள்ளதுடன், அமெரிக்கா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு