நடுக்கடலில் திமிங்கலத்தின் வாய்க்குள் சென்று உயிருடன் திரும்பிய இளைஞர் (காணொளி)
படகில் சென்ற நபரை ஹம்பேக் திமிங்கலம் விழுங்கிய தருணம் இது. நல்வாய்ப்பாக, அவர் காயமின்றி தப்பினார்.
சிலியின் பட்டகோனியாவில் அட்ரியன் சிமன்காஸ் தனது தந்தையுடன் கடலில் துடுப்பு படகில் சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. "முதலில், நான் செத்துவிட்டதாகவே நினைத்தேன்.
அந்த அனுபவம் அவ்வளவு பயங்கரமாக இருந்தது" என்று அந்த அனுபவத்தை விவரிக்கிறார் அட்ரியன் சிமன்கஸ்.
"நான் என் கண்களை மூடிக் கொண்டேன், மீண்டும் கண்களைத் திறந்த போது, நான் திமிங்கலத்தின் வாய்க்குள் இருப்பதை உணர்ந்தேன்" என்று அட்ரியன் பிபிசியிடம் விவரித்தார்.
"எனது முகத்தில் வழுவழுப்பான தன்மை கொண்ட ஏதோ ஒன்று உரசியதை உணர்ந்தேன்" என்று கூறிய அவர், தான் பார்த்தது அடர் நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் இருந்தது என்றும் அவர் நினைவு கூர்ந்தார்.
தொடர்ந்து பேசிய அட்ரியன்,
"அதை தடுக்க நான் இனி போராட முடியாது என்பதால் அது என்னை விழுங்கிவிட்டால் என்னால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தேன்," என்றும், "அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை நான் யோசிக்க வேண்டியிருந்தது" என்றும் தெரிவித்தார்.
ஆனால் சில நொடிகளில், அட்ரியன் மேற்பரப்பை நோக்கி எழுவதைப் போல உணரத் தொடங்கினார்.
கூடுதல் விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



