அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களை தொழில்நுட்ப உதவியுடன் மீட்க புதிய முயற்சி
அழிந்துபோகும் அபாயத்தில் உள்ள விலங்குகளை தொழில்நுட்ப உதவியுடன் காப்பாற்ற முடியுமா? அதனை சாத்தியமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது இந்த உயிரி வங்கி.
இந்த உயிரி வங்கி டார்ஜிலிங்கின் புகழ்பெற்ற பத்மஜா நாயுடு உயிரியல் பூங்காவில் தொடங்கப்பட்டுள்ளது. இது போன்ற வங்கி தொடங்கப்படுவது நாட்டிலேயே இதுதான் முதல் முறை.
பயோபேங்கிங் என்பது டிஎன்ஏ, செல்கள், திசுக்கள் மற்றும் உடல் திரவங்கள் போன்ற உடல் மாதிரிகளை ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை நோக்கங்களுக்காக சேகரித்து, சேமித்து வைப்பதாகும். அதன் மூலம் அவை தேவைப்படும்போது பயன்படுத்தப்படலாம்.
"இங்கு அருமையான உயிரியல் பூங்கா உள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த அருமையான விலங்குகள் உள்ளன. சிவப்பு பாண்டாக்கள், பனிச்சிறுத்தைகள், சைபீரியன் புலிகள், மார்க்கோர் என 40-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன. தற்போது அழிந்து வரும் உயிரினங்கள் மீது எங்கள் கவனம் உள்ளது. 24 இனங்களின் 80 மாதிரிகள் தற்போது எங்களிடம் உள்ளன" என்கிறார் பத்மஜா நாயுடு உயிரியல் பூங்காவின் இயக்குநரான பசவராஜ் ஹோலேயாச்சி.
இந்த பயோபேங்கிங்கில் விலங்கு மாதிரிகள் -196 டிகிரி செல்சியஸில் சேமிக்கப்படுகின்றன.
"இது எங்களுடையே சேமிப்பகம். விலங்குகள் இறந்தாலும் அல்லது உயிருள்ள விலங்குகளின் டிஷ்யூக்களை, உயிரி வங்கியில் சேமித்தாலும், அவற்றை இங்கே கொண்டு வந்து செயலாக்கம் செய்கிறோம். சேகரிக்க வேண்டிய மாதிரிகளை பெற்று, இங்கே சேமிக்கிறோம். செயலாக்க நடைமுறைகள் முடிந்த பிறகு, அவற்றை இங்கிருந்து மாற்றுகிறோம். இது -80 டிகிரி. முதலில் 428க்கு சென்றது, பிறகு -20க்கு சென்றது.
இறுதியில் -80க்கு வந்துவிட்டது. இங்கு 24 மணி நேரம் வைக்கிறோம். அதன்பிறகு அவற்றை இங்கு கொண்டுவருகிறோம். இது கிரயோ கேன் (cryocan), இதில் திரவ நைட்ரஜன் இருக்கிறது. இதில்தான் மாதிரிகள் இறுதியாக பாதுகாக்கப்படுகின்றன. இதில் வெப்பநிலை -196 டிகிரி செண்டிகிரேட். எதில் எந்த மாதிரி இருக்கிறது என்பது எங்கள் கேட்லாகில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இப்படி கேனில் இருந்து வெளியில் எடுக்கிறோம். ஒவ்வொரு மாதிரியும் மார்க்கிங் செய்யப்பட்டிருக்கும். எந்த மாதிரியை பரிசோதிக்க வேண்டும் என்றாலும், அதை மட்டும் வெளியில் எடுப்போம். அதில் கை வைக்கமாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார் பத்மஜா நாயுடு உயிரியல் பூங்கா பயோபேங்கிங் துறையின் தலைவர் ஜாய் டே.
இந்த முழு திட்டத்திலும் டார்ஜிலிங் மிருகக்காட்சிசாலைக்கு ஹைதராபாத்தின் செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் உதவுகிறது. இந்த ஆராய்ச்சி நிறுவனம் இந்திய அரசின் நிதி உதவியுடன் இயங்குகிறது.
"ஒடிசாவில் உள்ள நந்தன்கனன் உயிரியல் பூங்காவும் சொந்த பயோ பேங்கிங் வசதியை உருவாக்க எங்களை அணுகியுள்ளது. நாங்கள் இப்போது நந்தன்கனன் உயிரியல் பூங்காவுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். பெங்களூருவில் உள்ள பன்னர்கட்டா உயிரியல் பூங்காவுடன் ஒப்பந்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து வனவிலங்கு இனங்களையும் உள்ளடக்கும் வகையில் டெல்லி மற்றும் சக்கர்பக் உயிரியல் பூங்கா போன்றவற்றுடன் இணைந்து பணியாற்ற முயற்சிக்கிறோம்." எனத் தெவித்துள்ளார் முதன்மை விஞ்ஞானி சாம்பசிவ ராவ்.
உயிரி வங்கி தொடங்கியது குறித்து உயிரியல் பூங்கா நிர்வாகம் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது.
பயோபேங்கிங் துறை தலைவர் ஜாய் டே பேசுகையில், "எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் விலங்குகளின் மாதிரிகளை சேமித்து வைத்திருக்கிறோம். நாளடைவில் அவற்றின் எண்ணிக்கை குறையலாம் அல்லது அவை இல்லாமலேயே போய்விடலாம். இந்த விலங்குகளின் டிஷ்யூக்களை பயோபேங்கிங் செய்வதற்கான காரணம் எதிர்காலத்திற்கானது. 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு பிறகு அல்லது 20 ஆண்டுகளில் அவை முற்றிலுமாக இல்லாமல் போய்விட்டால் அப்போது இந்த டிஷ்யூக்கள் பயன்படும். இதன் முக்கியத்துவம் என்று பார்த்தால், அது இன்று இல்லை, ஆனால் எதிர்காலத்
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



