தைவான்: சூறாவளியால் தரை இறங்க தடுமாறிய விமானம்

காணொளிக் குறிப்பு, தைவான்: சூறாவளியால் தரை இறங்க தடுமாறிய விமானம்
தைவான்: சூறாவளியால் தரை இறங்க தடுமாறிய விமானம்

தைவானில் காங் ரே சூறாவளி காரணமாக விமானம் ஒன்று தரையிறங்க முடியாமல் மீண்டும் பறந்து சென்ற காட்சி இது. தவ்யென் (Taoyuan) விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றபோது பலத்த காற்று வீசியது.

இதனால், தள்ளாடிய விமானம் மீண்டும் பறந்து சென்றது. இரண்டாவது முயற்சியில் விமானம் வெற்றிகரமாக தரையிறங்கியது.

தைவானின் கிழக்கு கரையில் காங் ரே (kong Rey) சூறாவளி கரையை கடந்தது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் அந்நாட்டை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி இதுவாகும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)