'100 ஆண்டுகளில் இதுபோல் பார்த்ததே இல்லை' - தர்மஸ்தலா வழக்கு பற்றிய பிபிசி கள ஆய்வு (காணொளி)

'100 ஆண்டுகளில் இதுபோல் பார்த்ததே இல்லை' - தர்மஸ்தலா வழக்கு பற்றிய பிபிசி கள ஆய்வு (காணொளி)

தக்‌ஷிண கன்னட மாவட்டத்தில் உள்ள மங்களூருவுக்கு அருகிலுள்ள தர்மஸ்தலா காவல் நிலையத்தில் கடந்த ஜூலை 3ஆம் தேதி, அடையாளத்தை வெளிப்படுத்தாத ஒரு நபர் அளித்த புகார் நாட்டையே உலுக்கி இருக்கிறது.

"தர்மஸ்தாலாவில் பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான சடலங்களை என் கைகளால் புதைத்துள்ளேன். அவற்றில் உள்ளாடை இல்லாத பெண்களின் சடலங்களும், பள்ளி செல்லும் சிறுமிகளின் சடலங்களும் இருந்தன. அந்த இடங்கள் அனைத்தையும் நான் காண்பிப்பேன், மேலும் அவற்றை புதைக்க சொன்னவர்கள் யார் என்பதையும் உங்களுக்கு சொல்வேன். நடவடிக்கை எடுங்கள்" என்று புகார்தாரர் காவல்துறை மற்றும் நீதிபதியிடம் கூறினார்.

புகார்தாரர் தர்மஸ்தலாவில் உள்ள கோவிலில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்ததாக கூறுகிறார். தான் அளிக்கும் புகார் மீது நம்பிக்கையை ஏற்படுத்த ஒரு எலும்புக்கூட்டின் புகைப்படங்களையும் சமர்ப்பித்தார். ஒரு வேளை தான் கொல்லப்பட்டால் உண்மை வெளிவராமல் இருக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்த, இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் எனக் கூறி ஒரு பட்டியலை சீல் வைக்கப்பட்ட உறையில் தனது வழக்கறிஞரிடம் சமர்ப்பித்துள்ளார்.

கர்நாடக அரசு இந்த வழக்கை விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்துள்ளது. தர்மஸ்தலா செய்தித் தொடர்பாளர் சிறப்பு புலனாய்வு குழு நியமனத்தை வரவேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். புகார்தாரர் அடையாளம் காட்டும் இடங்களை புலனாய்வு குழு தோண்டத் தொடங்கியது. சில இடங்களில் சடலங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நடவடிக்கை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

முழு விவரம் காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு