உண்மையான தந்தையை கண்டுபிடித்த பெண்ணுக்கு ஃபேஸ்புக்கில் காத்திருந்த அதிர்ச்சி

உண்மையான தந்தையை கண்டுபிடித்த பெண்ணுக்கு ஃபேஸ்புக்கில் காத்திருந்த அதிர்ச்சி

தமுனா மூசெரிட்சே தன் தந்தையை முதன்முறையாக பார்க்கிறார். இந்த தருணத்திற்காக அவர் பல ஆண்டுகள் காத்திருந்தார்.

இந்தாண்டு ஆரம்பத்தில் ஜார்ஜியாவில் கள்ளச் சந்தையில் தத்துக் கொடுக்கப்படுவது குறித்த பிபிசி ஆவணப்படத்தில் பங்கேற்றார்.

கடந்த 2016-ல் இறந்த தன் தாயின் ஆவணங்களை பார்த்த அவர், தான் தத்துக் கொடுக்கப்பட்ட குழந்தை என்பதை கண்டறிந்தார்.

இது, தங்களின் உண்மையான பெற்றோர்களை தேடுபவர்களுக்கான ஃபேஸ்புக் குழுவை உருவாக்க வழிவகுத்தது.

இது பல பத்தாண்டுகளாக ஆயிரக்கணக்கான குழந்தைகளை கடத்தி விற்ற கும்பலை, பத்திரிகையாளரான தமுனா அம்பலப்படுத்த உதவியது.

தமுனா தன்னை பெற்ற தாயையும் கண்டுபிடித்தார்.

அவர், தமுனா விற்கப்பட்டவர் அல்ல என்றும் தத்து கொடுக்கப்பட்டவர் என்றும் கூறியுள்ளார்.

நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இணைய அவருடைய ஃபேஸ்புக் குழு உதவியது. இப்போது தமுனா தன் உறவினர்களுடன் இணைந்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)