காஸா, சூடான்: போரால் பள்ளிகள் சிதைந்தாலும் கல்விக் கனவை விடாமல் துரத்தும் குழந்தைகள்

காஸா, சூடான்: போரால் பள்ளிகள் சிதைந்தாலும் கல்விக் கனவை விடாமல் துரத்தும் குழந்தைகள்

மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத மோதல்களால் குறைந்தது 3 கோடி குழந்தைகள் கல்வி பெற முடியாத நிலையில் உள்ளதாக யுனிசெஃப் தரவுகள் கூறுகின்றன. அவர்களுள் 1.7 கோடி குழந்தைகள் சூடானில் மட்டுமே உள்ளனர்.

காஸாவில் நடைபெறும் போர் மற்றும் சூடானில் நடைபெறும் மோதல்களுக்கு நடுவே, ஆயிரக்கணக்கான பள்ளிகள் அழிந்த நிலையிலும், பல குழந்தைகள் தங்கள் கனவுகளை நனவாக்கும் பயணத்தைத் தொடர்கின்றனர்.

ஹமாஸ்-இஸ்ரேல் போரால் சுமார் 6,50,000 குழந்தைகள் கல்வி பெற முடியாத நிலையில் உள்ளனர்.

எல்லாவற்றையும் தாண்டி தாரேக், சஃபா போன்ற குழந்தைகள் கற்பதை கைவிடவில்லை.

இந்நிலையில், அரபு மொழி பேசும் குழந்தைகள் கல்வி கற்கும் வகையில், 'Dars' எனும் வாராந்திர நிகழ்ச்சியை பிபிசி உலக சேவை ஆரம்பித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)