'இரான் - இஸ்ரேல் மோதல் விரைவில் மீண்டும் தொடங்கலாம்' - டொனால்ட் டிரம்ப்

'இரான் - இஸ்ரேல் மோதல் விரைவில் மீண்டும் தொடங்கலாம்' - டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜூன் 25 அன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "அடுத்த வாரம் இரானுடன் பேச உள்ளோம். நாங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம். எனக்குத் தெரியவில்லை. அவர்கள் (இரான் - இஸ்ரேல்) சோர்வாக இருக்கிறார்கள்.

அவர்கள் மிகவும் மோசமாக சண்டையிட்டனர். பின், இருவரும் சண்டையை நிறுத்த முடிவு செய்தனர்.

மோதல் மீண்டும் தொடங்குமா?

ஒரு நாள் தொடங்கலாம் என நினைக்கிறேன். அது விரைவில் தொடங்கலாம். அடுத்த வாரம் இரானுடன் நாங்கள் பேச உள்ளோம். நாங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம். எனக்குத் தெரியவில்லை.

அவ்வளவு அவசியமில்லை என நினைக்கிறேன். போர் இருந்தது, அவர்கள் சண்டையிட்டனர்.

தற்போது அவர்கள் சண்டையை நிறுத்தியுள்ளனர். ஒப்பந்தம் இருக்கிறதா, இல்லையா என்பது பற்றி எனக்கு கவலையில்லை. அணு ஆயுதம் வேண்டாம் என்று நாங்கள் விரும்புகிறோம். அணு ஆயுதத்தை நாங்கள் அழித்தோம்" எனத் தெரிவித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு