காணொளி: தமிழ் தொடர்பாக கமல்ஹாசன் நிர்மலா சீதாராமன் இடையே என்ன விவாதம்?

காணொளிக் குறிப்பு, கமல்ஹாசன் உரைக்கு நிர்மலா சீதாராமன் தரப்பு பதில் என்ன?
காணொளி: தமிழ் தொடர்பாக கமல்ஹாசன் நிர்மலா சீதாராமன் இடையே என்ன விவாதம்?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகம், கமல்ஹாசன் தவறான தகவலைப் பரப்புவதாகக் குற்றம்சாட்டியுள்ளது.

''கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் பேசும்போது, 1943-ஆம் ஆண்டு 'விடுதலை' இதழில் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் கூறியிருந்த தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது' என்ற கூற்றையே அமைச்சர் மேற்கோள் காட்டினார், அது அவரது சொந்தக் கருத்து அல்ல'' என்று எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளது.

முன்னதாக, மாநிலங்களவையில் தனது முதல் உரையை வழங்கிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நிதியமைச்சரை மறைமுகமாக விமர்சித்துப் பேசினார். "தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது; தமிழன் பிச்சை எடுக்க மாட்டான்" என்று ஆவேசமாகத் தெரிவித்த அவர், அண்ணாவின் வழியில் மொழிக்கான ஆக்கிரமிப்புகளை எதிர்கொள்வதாகவும் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு