You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரிட்டன் அரசர் சார்ல்ஸுக்கு புற்றுநோய்
- எழுதியவர், ஷான் காக்லன்
- பதவி, அரச செய்தியாளர்
பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்ல்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
புரோஸ்டேட் (முன்னிற்கும் சுரப்பி) வீக்க பிரச்னைக்காக அரசர் எடுத்துக் கொண்ட சிகிச்சையின்போது இந்தப் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் இது புரோஸ்டேட் புற்றுநோய் அல்ல.
என்ன வகையான புற்றுநோய் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. ஆனால் அரண்மனையின் அறிக்கையின்படி அரசர் திங்களன்று "வழக்கமான சிகிச்சைகளை" தொடங்கினார்.
75 வயதான அரசர், அவரது பொது நிகழ்ச்சிகளில் இருந்து விலகியிருப்பார். அரசி கமீலா மற்றும் இளவரசர் வில்லியம் அவருக்கு உதவியாக இருப்பார்கள்.
புற்றுநோயின் நிலை அல்லது முன்னரே கணிக்கப்பட்டது பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் பகிரப்படவில்லை.
அரசர் 'நேர்மறையாக இருக்கிறார்'
அரசர் "தனது சிகிச்சை குறித்து முற்றிலும் நேர்மறையாக உணர்வதாகவும் விரைவில் முழு பொதுப் பணிக்கு திரும்புவதை எதிர்பார்ப்பதாகவும்" பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
அரண்மனையின் அறிக்கை விவரம்
அரசர் தனது பொது நிகழ்வுகளை தற்காலிகமாக நிறுத்தினாலும், அரச தலைவராக தனது அரசியலமைப்பு பொறுப்பை தொடர்வார்.
அவர் ஞாயிற்றுக்கிழமை சாண்ட்ரிங்ஹாமில் ஒரு தேவாலய சேவையில் பங்கேற்றார், அங்கு அவர் கூட்டத்தை நோக்கி கையசைத்தார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லண்டன் தனியார் மருத்துவமனையில் அவருக்கு புரோஸ்டேட் சிகிச்சை செய்யப்பட்டது.
புரோஸ்டேட் புற்றுநோய் அல்ல
ஆண்கள் தங்களது புரோஸ்டேட் சுரப்பியை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு நோக்கத்துடன், தனது புரோஸ்டேட் சிகிச்சையைப் பற்றி அரசர் முன்னரே பொதுவெளியில் தெரிவித்திருக்கிறார்.
மக்களிடையே புரோஸ்டேட் பிரச்னைகள் அதிகரித்திருப்பது குறித்து பிரிட்டனின் NHS (தேசிய சுகாதார சேவை) இணையதளம் குறிப்பிட்ட நிலையில், இந்த பிரச்னை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் அவர் மகிழ்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.
புரோஸ்டேட் தொடர்பாக அரசர் எடுத்துக் கொண்ட சமீபத்திய சிகிச்சையின் போது அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அது புரோஸ்டேட் புற்றுநோய் அல்ல என புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
அவர் புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருப்பார், ஆனால் புற்றுநோய் தொடக்க நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
அரசப் பணிகளில் இருந்து விலகியிருப்பார்
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு புரோஸ்டேட் சிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்து வந்தார்.
75 வயதான அரசர், அரச தலைவராக தனது அரசியலமைப்பு பொறுப்பை தொடர்வார்.
அரசர் தனது பொது செயல்பாடுகளில் தற்காலிகமாக விலகியிருப்பார். அரசி கமீலா, இளவரசர் சார்ல்ஸ் ஆகியோர் மன்னரின் பணிகளில் உதவியாக இருப்பார்கள்.
ஆண்கள் தங்களது புரோஸ்டேட் சுரப்பியை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு நோக்கத்துடன், தனது புரோஸ்டேட் சிகிச்சையைப் பற்றி அரசர் முன்னரே பொதுவெளியில் தெரிவித்திருக்கிறார்.
மக்களிடையே புரோஸ்டேட் பிரச்னைகள் அதிகரித்திருப்பது குறித்து பிரிட்டனின் NHS (தேசிய சுகாதார சேவை) இணையதளம் குறிப்பிட்ட நிலையில், இந்த பிரச்னை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் அவர் மகிழ்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.
புற்றுநோய்க்கான சிகிச்சையில் கீமோதெரபி சிகிச்சையும், கதிர்வீச்சு சிகிச்சையும் அடங்கும். கீமோதெரபி என்பது புற்றுநோய் செல்களைக் கொல்லப் பயன்படும் மருந்துச் சிகிச்சையாகும்; கதிரியக்க சிகிச்சை என்பது புற்றுநோய் செல்களை அழிக்க கதிர்வீச்சு பயன்படுத்தப்படும் சிகிச்சை; இவையில்லாமல் புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து தாக்கும் புற்றுநோய் மருந்துகளும் பயன்படுத்தப்படும்
பிரிட்டனில் இரண்டில் ஒருவருக்குப் புற்றுநோய்
பிரிட்டன் மக்களில் இரண்டில் ஒருவருக்கு அவர்களது வாழ்நாளில் எதாவது ஒருவித புற்றுநோய் உண்டாகிறது.
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை வலைத்தளத்தின்படி, உலகில் 200-க்கும் மேற்பட்ட வகையான புற்றுநோய்கள் உள்ளன. இங்கிலாந்தில் மிகவும் பொதுவானவை மார்பகம், நுரையீரல், புரோஸ்டேட் மற்றும் குடல் புற்றுநோய்கள் ஆகும்.
பல வகையான புற்றுநோய்களும் ஏற்படுவதற்கான வாய்ப்பு வயதாக ஆக அதிகரிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான (36%) புதிய புற்றுநோய்கள் 75 வயதுக்கு மேற்பட்டவர்களையே பாதிப்பதாக இங்கிலாந்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், தொழிலாளர் கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் மக்களவை சபாநாயகர் சர் லிண்ட்சே ஹோய்ல் ஆகியோர் அரசர் ‘முழுமையாகவும் விரைவாகவும் குணமடைய’ வாழ்த்தினார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது கவலையை தெரிவித்ததோடு, மன்னரிடம் பேசவிருப்பதாகவும் கூறினார்.
பைடன் எக்ஸ் தளத்தில் இட்ட ஒரு பதிவில், “புற்றுநோயைக் கண்டறிந்து, சிகிச்சை பெற்று, அதைக் கடந்து வருவதற்கு நம்பிக்கையும் தைரியமும் தேவை. ஜில் [பைடனின் மனைவி] மற்றும் நான் ஐக்கிய இராஜ்ஜியத்தின் மக்களுடன் இணைந்து, அரசர் விரைவாகவும் முழுமையாகவும் குணமடையப் பிரார்த்திக்கிறோம்," என்று தெர்வித்திருந்தார்.
பைடனின் மகன் பியூ, தனது 46 வயதில் மூளை புற்றுநோயால் காலமானார். மேலும் அவரது நீண்டகால நண்பரான குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் மெக்கெய்னும் 2018-இல் புற்றுநோயால் காலமானார்.
அரசரின் சுற்றுப்பயணங்கள்
கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரசியும் அரசர் சார்ல்ஸின் தாயாருமான இரண்டாம் எலிசபெத் இறந்தவுடன் சார்ல்ஸ் அரியணை ஏறினார். அடுத்த மே மாதம் அவருக்கு முடிசூட்டு விழா நடைபெற்றது.
அரசரும் அரசியும் வரும் மே மாதம் கனடாவிற்கும், அக்டோபர் மாதம் நடைபெறும் காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டிற்காக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் சமோவாவிற்கும் செல்லத் திட்டமிட்டிருந்தனர்.
அரசர் முழு பொதுப் பணிகளுக்குத் திரும்புவதற்கான தேதி எதுவும் பரிந்துரைக்கப்படாத நிலையில், இந்தச் சுற்றுப்பயணங்கள் நடைபெறுமா என்பதை பக்கிங்ஹாம் அரண்மனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)