You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்
BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்.
வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம்.
எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம்.
நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும். பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை மாறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அந்த வகையில் இந்த வாரம், சந்திரயான்-3: நிலாவில் என்ன செய்யப் போகிறது? - முழு விவரம், நிலா யாருக்குச் சொந்தம்? - சுவாரஸ்யமான வரலாறு, “சாலையில் நிலச்சரிவு, தாங்க முடியாத குளிர்”– அமர்நாத் யாத்திரையில் சிக்கிய தமிழர்கள் பகிர்ந்த அனுபவம், 'பப்ஜி' காதலனுக்காக எல்லை தாண்டிய பாகிஸ்தான் பெண் - இந்தியாவுக்குள் நுழைந்தது எப்படி?, அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு முறை - எங்கு, எப்படி சேவையைப் பெறலாம்? ஆகிய ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
சந்திரயான்-3: நிலாவில் என்ன செய்யப் போகிறது? - முழு விவரம்
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட பிரமாண்டமான முயற்சியின் தொடக்கப்புள்ளியாக வெள்ளிக்கிழமை பிற்பகல் சந்திரயான்-3 விண்ணில் சீறிப் பாய்ந்தது. முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
நிலா யாருக்குச் சொந்தம்? - சுவாரஸ்யமான வரலாறு
1960.
அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான பனிப்போர் உலகையே உஷ்ணமாக்கிக் கொண்டிருந்த காலகட்டம்.
சர்வதேச அரசியலில் யாருடைய கை ஓங்கியிருக்கிறது, மற்ற நாடுகள் யார் பக்கம் நிற்கின்றன என்பதாக இருந்த இறுக்கம் இரண்டு முக்கிய வழிகளில் போட்டியாக வெளிப்பட்டது.
முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
“சாலையில் நிலச்சரிவு, தாங்க முடியாத குளிர்”– அமர்நாத் யாத்திரையில் சிக்கிய தமிழர்கள் பகிர்ந்த அனுபவம்
காஷ்மீரில் உள்ள அமர்நாத் கோவிலுக்கு யாத்திரை சென்ற தமிழர்கள், கன மழை காரணமாக சாலை அடித்துச்செல்லப்பட்டதால் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
'பப்ஜி' காதலனுக்காக எல்லை தாண்டிய பாகிஸ்தான் பெண் - இந்தியாவுக்குள் நுழைந்தது எப்படி?
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மாலிர் கான்ட் காவல் நிலைய போலீசாரால் தேடப்பட்டு வரும் சீமா மற்றும் அவரின் நான்கு குழந்தைகள், தற்போது உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் ரபுபுராவில் வசித்து வருகின்றனர்.
முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
மிஷன் இம்பாசிபிள் வரிசையில் வெளியாகும் படங்களின் வெற்றி ரகசியம் என்ன?
மிஷன் இம்பாசிபிள் (Mission: Impossible) பட வரிசையில் ஏழாவது படமான மிஷன் இம்பாசிபிள்: டெட் ரெக்கனிங் (Mission: Impossible: Dead Reckoning) வெளியாகியுள்ளது. இந்த வரிசையின் பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையே பெற்றிருக்கின்றன என்ன காரணம்?
முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்