அல் அக்ஸா மசூதியில் வழிபட விடாமல் பாலத்தீனர்களை தடுக்கிறதா இஸ்ரேல்? என்ன நடக்கிறது?

காணொளிக் குறிப்பு, அல் அக்ஸா மசூதியில் பாலத்தீனர்களுக்கு அனுமதி மறுப்பா? என்ன நடக்கிறது?
அல் அக்ஸா மசூதியில் வழிபட விடாமல் பாலத்தீனர்களை தடுக்கிறதா இஸ்ரேல்? என்ன நடக்கிறது?

ஜெருசலேமில் உள்ள அக் அக்ஸா மசூதியில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகைக்காகச் சென்ற முஸ்லிம்கள் சிலர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதே இடத்தில் யூதர்களின் புனித்தலமும் உள்ளதால் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இஸ்லாமியர்களின் மூன்றாவது புனிதத்தலமாக அல் அக்ஸா மசூதி கருதப்படுகிறது.

இஸ்ரேலிய படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட உம் அக்ரம் கவாஸ்மி என்ற பெண் கூறுகையில் "என்னை அவர்கள் உள்ளே அனுமதிக்க மறுக்கிறார்கள். நான் ஒரு வயதானவள். நான் என்ன செய்யப்போகிறேன். நான் உள்ளே சென்று தொழ வேண்டும் அவ்வளவுதான்" எனறார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு அல் அக்ஸா மசூதிக்குச் சென்று வழிபடுவதற்கு இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தடை விதித்துள்ளதாக பாலத்தீனர்கள் கூறுகின்றனர்.

முழு விவரம் காணொளியில்...

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)