You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மன்மோகன் சிங்: இந்தியாவுக்கு என்ன செய்தார்? சர்வதேச அளவில் பேசப்படுவது ஏன்?
நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டிசம்பர் 26 அன்று இரவில் தனது 92 வயதில் காலமானார்.
மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகர் சஞ்சய் பாரு, அவரது பதவிக்காலம் குறித்து தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். 2004ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்குப் பிறகு, மன்மோகன் சிங் பிரதமர் பதவியைப் பெற்றது தற்செயல் நிகழ்வு. அதை மன்மோகன் சிங் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்.
பிரதமர் பதவிக்கு சோனியா காந்தி மன்மோகன் சிங்கை தேர்வு செய்தார். ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜில் பட்டம், நிதி விஷயங்களில் நிறைய அனுபவம் கொண்டிருந்த மன்மோகன் சிங் அந்தப் பதவிக்குப் பொருத்தமான வேட்பாளராக இருந்தார்.
கடந்த 1980 முதல் 1982 வரை திட்டக் கமிஷனில் இருந்த மன்மோகன் சிங், 1982-1985 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தார். கடந்த 1991இல், நிதியமைச்சரானார். பின்னர் அவரது பதவிக்காலம் இந்திய வரலாற்றில் ஒரு மைல்கல்லாக நிரூபிக்கப்பட்டது.
கடந்த 1991இல் இந்திய பொருளாதாரத்தை உலகுக்குத் திறந்துவிட்டார். குறுகிய காலத்திலேயே இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாக மாறியது. இதற்காக உலகம் முழுவதும் மன்மோகன் சிங் பாராட்டப்பட்டார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்,இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)