காணொளி: டேக் ஆஃப் ஆகும்போது கழன்று விழுந்த விமானத்தின் சக்கரம்

காணொளிக் குறிப்பு,
காணொளி: டேக் ஆஃப் ஆகும்போது கழன்று விழுந்த விமானத்தின் சக்கரம்

லாஸ் வேகாஸ்லிருந்து லண்டனுக்கு புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் ஒரு சக்கரம் டேக் ஆஃப் ஆகும்போது கழன்று விழும் காட்சி இது.

ஏர்பஸ் A350-1000 விமானத்தின் வலது பக்க சக்கரம் கழன்று கீழே விழுந்தது.

சக்கரம் விழுந்ததில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

மேலும், சக்கரம் கழன்றாலும் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் எந்தவித பிரச்னையும் இல்லாமல் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு