இலங்கை: ராஜபக்ஸ குடும்பத்தால் அடுத்தடுத்த தோல்விகளில் இருந்து மீண்டு வர முடியுமா?
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போருக்கு பிறகு இலங்கையின் அரசியலில் நீங்காத இடம் பெற்ற மஹிந்த, கோட்டாபய ராஜபக்ஸவின் அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது சமீபத்திய தேர்தல் முடிவுகள்.
ஜனாதிபதி தேர்தலிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத அவர்களின் ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர கூட்டமைப்பு கட்சி நாடாளுமன்ற தேர்தலில் மோசமான தோல்வியை தழுவியது.
கடந்த தேர்தலில் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதோடு, நாடாளுமன்ற தேர்தலில் 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
இலங்கையின் சுதந்திரத்திற்கு பிறகு இலங்கை அரசியலில் நீங்காத இடம் பெற்றிருந்த ராஜபக்ஸவின் குடும்பத்தினரின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்? இந்த படுதோல்விக்கும் வீழ்ச்சிக்கும் என்ன காரணம்? இந்த தோல்வியில் இருந்து மீளுமா ராஜபக்ஸவின் குடும்பம்?
முழு விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



