கனிமொழியிடம் டிக்கெட் கேட்ட சர்ச்சை: பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணிநீக்கம் செய்யப்பட்டாரா?

காணொளிக் குறிப்பு, கனிமொழியிடம் டிக்கெட் கேட்ட சர்ச்சை: பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணிநீக்கம் செய்யப்பட்டாரா?
கனிமொழியிடம் டிக்கெட் கேட்ட சர்ச்சை: பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணிநீக்கம் செய்யப்பட்டாரா?

கோவையில் தனியார் பேருந்து ஓட்டுநராக வலம் வந்த இளம்பெண் ஷர்மிளா பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். திமுக எம்.பி கனிமொழி ஷர்மிளாவை சந்தித்து அவரது பேருந்தில் பயணம் செய்த நிலையில், நடத்துநர் உடனான பிரச்னையால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

ஆனால் சம்மந்தப்பட்ட பேருந்து நிர்வாகம் இதனை மறுத்துள்ளது. கோவை காந்திபுரம் - சோமனூர் வழித்தடத்தில் தனியார் பேருந்தை இயக்கி வந்தார் ஷர்மிளா. இவர் பேருந்து ஓட்டுவது குறித்து பரவலாக செய்தி வெளியான நிலையில், மக்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்தது.

கனிமொழியிடம் டிக்கெட் கேட்ட சர்ச்சை: பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணிநீக்கம் செய்யப்பட்டாரா?

முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என்பதால் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பாராட்டு தெரிவித்தனர். அண்மையில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஷர்மிளா ஓட்டிச் சென்ற பேருந்தில் பயணித்ததோடு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதேபோல இன்று திமுக எம்.பி கனிமொழியும் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை ஷர்மிளா ஓட்டிச் சென்ற தனியார் பேருந்தில் பயணம் செய்து அவரை வாழ்த்தினார். அப்போது நடத்துநர் கனிமொழியிடம் டிக்கெட் கேட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: