வியட்நாமில் 53 பேருடன் சென்ற சுற்றுலாப் படகு கவிழ்ந்தது
வியட்நாமில் 53 பேருடன் சென்ற சுற்றுலாப் படகு கவிழ்ந்தது
வியட்நாமில் 53 பேருடன் சென்ற சுற்றுலாப் படகு கவிழ்ந்தது. பிரபல சுற்றுலாத்தளமான ஹா லாங் விரிகுடாவில் நடந்த இந்த விபத்தில் குறைந்தது 37 பேர் உயிரிழந்தனர்.
திடீர் புயல் காரணமாக படகு கவிழ்ந்ததாக வியட்நாம் எல்லைப் படை மற்றும் கடற்படை தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது வரை 11பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
நேரில் பார்த்தவர் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, இடி மின்னலுடன், ஆலங்கட்டி மழை பெய்ததாக தெரிவித்தார்.



