அதிகம் உழைத்தாலும் குறைந்த ஊதியம் பெறும் பெண்கள் - உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 கூறுவது என்ன?

அதிகம் உழைத்தாலும் குறைந்த ஊதியம் பெறும் பெண்கள் - உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 கூறுவது என்ன?

இந்தியாவில் ஒரு சதவீதம் பேர் வசம் 40% செல்வம் குவிந்திருப்பதாக சமீபத்தில் வெளியான சர்வதேச அறிக்கை தெரிவிக்கிறது.

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 வெளியாகியுள்ளது. இதன்மூலம் ஏழை - பணக்காரர் சமத்துவமின்மை வரிசையில் முன்னிலையில் இருக்கும் உலக நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது தெரியவந்துள்ளது.

2018, 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு மூன்றாவது முறையாக இந்த அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

200-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் சேகரித்த தரவின்படி உருவாக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையை, பொருளாதார வல்லுநர்கள் லூகஸ் சேன்சல், ரிக்கார்டோ கோமஸ் கரேரா, ரோவைடா மாஷ்ரஃப் மற்றும் தாமஸ் பிகெட்டி ஆகியோர் எழுதியுள்ளனர்.

இந்த அறிக்கையில் இந்தியா பற்றி வெளியான தரவுகள் என்ன? ஊதியத்தில் இருக்கும் பாலின வேறுபாடுகள் பற்றி இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது என்ன? இந்த காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு