அமெரிக்காவில் 'மம்மி' இறுதி ஊர்வலம் - 128 ஆண்டுக்கு முன் இறந்த அவர் யார்?
நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது ஏதோ திருமண ஊர்வலமோ அல்லது சுப நிகழ்ச்சியோ அல்ல, இது ஒரு திருடரின் இறுதி ஊர்வலம். இவர் இன்றோ, நேற்றோ இறந்தவர் அல்ல.
சுமார் 128 ஆண்டுகளுக்கு முன் இறந்தவர். ஊர் தெரியாது, பெயர் தெரியாது, உறவினர் யாரென்றே தெரியாது. ஆனால், 128 ஆண்டுகளுக்கு உயிரிழந்த ஒருவரின் இறுதி ஊர்வலம் ஏன் பிரமாண்டமாக நடக்கிறது.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் ஸ்டோன்மேன் வில்லி என உள்ளூர் மக்களால் அறியப்படும் இந்த நபர் திருட்டு வழக்கில் கைதாகி, சிறையில் இருக்கும் போதே 1895ஆம் ஆண்டு சிறுநீரக கோளாறு காரணமாக உயிரிழந்தார். இவரது உடலை உறவினரிடம் ஒப்படைப்பதற்காக அதிகாரிகள் பதப்படுத்திய போது எதிர்பாராத விதமாக மம்மியானர்.
பின்னர், இவரின் குடும்பத்தினரைக் கண்டுபிடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில், பென்சில்வேனியாவில் மம்மியாக காட்சிப்படுத்தப்ப்பட்டார்.
முழு விவரம் காணொளியில்....

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



