You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒடிஷா ரயில் விபத்து: ஆட்டோ ஓட்டுநர் செய்த மனித நேயமிக்க நெகிழ்ச்சி சம்பவம்
விரோதிக்குக்கூட இப்படி ஒரு நிலை வரக்கூடாது என்பார்களே, அம்மாதிரியான நிலையில்தான் இருக்கிறார்கள் மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தைச் சேர்ந்த ராய் சகோதரர்கள்.
பருண் ராய், சித்தம் ராய், பாசுதேவ் ராய் ஆகிய மூன்று பேரும் இறந்துபோனதாகக் கருதப்படும் தங்கள் உறவினர்கள் இருவரைத் தேடி, எல்லா இடமும் அலைந்துவிட்டார்கள். இதுவரை அவர்களால் சடலங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த மூன்று பேரும் கேரளாவில் கூலித் தொழிலாளராக வேலைபார்த்து வருகிறார்கள். இவர்களுடைய சகோதரியின் கணவரான நித்தம் ராயும் சகோதரரான சந்தன் ராயும் கேரளாவுக்கு வந்து இவர்களோடு சேர்ந்து ஏதாவது வேலை பார்க்கலாம் என நினைத்தார்கள்.
மேற்கு வங்கத்திலிருந்து சென்னைக்கும் சென்னையிலிருந்து கேரளாவுக்கும் செல்வதுதான் இவர்கள் திட்டம். இதற்காக ஜூன் இரண்டாம் தேதி நித்தம் ராயும் சந்தன் ராயும் கோரமண்டல் எக்ஸ்பிரசில் ஏறினார்கள்.
அன்று மாலை ஏழரை மணியளவில் நித்தம் ராயின் போனிலிருந்து இந்தச் சகோதரர்களுக்கு ஒரு போன் வந்தது. ரயில் விபத்துக்குள்ளாகிட்ட தகவலும் போனுக்குரியவர் இறந்துவிட்ட தகவலும் சொல்லப்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்