கால்களால் பவுலிங், மார்பை பயன்படுத்தி ஃபீல்டிங்: கிரிக்கெட்டில் அசத்தும் மாற்றுத்திறனாளி

காணொளிக் குறிப்பு, கால்களால் பவுலிங், மார்பினில் ஃபீல்டிங் : கிரிக்கெட்டில் அசத்தும் மாற்றுத்திறனாளி
கால்களால் பவுலிங், மார்பை பயன்படுத்தி ஃபீல்டிங்: கிரிக்கெட்டில் அசத்தும் மாற்றுத்திறனாளி

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த விபுல் சவுத்ரி மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் ஆவார். இரு கைகளும் இல்லாத போதும், அவர் பந்து வீசுவதுடன், பேட்டிங், பீல்டிங் என எல்லாவற்றிலும் சிறப்பாக செயல்படுகிறார். சாப்பி என்ற கிராமத்தில் பிறந்த அவர் ஐந்து ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். தனது அன்றாட வேலைகள் அனைத்தையும் யாருடைய உதவியும் இல்லாமல் செய்ய முடிவதாக பெருமையுடன் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு