காணொளி: இரண்டு முன்பக்கங்களைக் கொண்ட விசித்திர கார்
காணொளி: இரண்டு முன்பக்கங்களைக் கொண்ட விசித்திர கார்
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள விசித்திர கார் இது. பக்2பக் (Bak2Bak) என்னும் அழைக்கப்படும் இந்த காரில், இரண்டு பழைய கிரைஸ்லர் கார்களின் முன்பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளது.
இரண்டு கார்களில் ஒன்று கனடாவிலும், மற்றொன்று அமெரிக்காவிலும் செய்யப்பட்டது.
"இதில் ஒரு ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவென்றால், இந்த இரண்டு முன்பகுதிகள் இருப்பதால், குறிப்பாக காருக்கு பின்னால் வருபவர்களுக்கு யாரோ பின்பக்கம் உள்ள ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருப்பது போலும் அது அவர்களை நோக்கி இருப்பது போலும் உணரச்செய்யும். இது ஒன்றும் புதிய யோசனை இல்லை. ஒரு எளிமையான விளையாட்டுத்தனமாக யோசனை தான்" என்கிறார் பக்2பக் காரை உருவாக்கிய ஸாக் சட்டன்.
இவரது இந்த வினோத காரை பலரும் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



