அமெரிக்கா: அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் என்ன பேசினார்?

காணொளிக் குறிப்பு, அமெரிக்கா: அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் என்ன பேசினார்?
அமெரிக்கா: அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் என்ன பேசினார்?

புளோரிடாவில் உள்ள தனது பிரசாரக் குழுவின் தலைமையகத்தில், ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டிரம்ப், "இந்த நாட்டை மீட்டெடுக்க நாங்கள் உதவப் போகிறோம்" என்று கூறினார்.

டிரம்பை அதிபர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தேவையான தேர்வாளர் குழு வாக்குகளை அவர் இன்னும் பெறவில்லை என்றாலும் கூட, தான் வெற்றி பெற்றுவிட்டதாக டிரம்ப் அறிவித்துக் கொண்டுள்ளார்.

“இது அமெரிக்காவின் பொற்காலம்" என்று கூறிய டிரம்ப், "இது அமெரிக்க மக்களுக்கு கிடைத்த அற்புதமான வெற்றியாகும், இது அமெரிக்காவை மீண்டும் சிறந்த தேசமாக மாற்றும்" என்றார்.

“அமெரிக்கர்கள், வரும்காலத்தில் இந்த நாளைப் பற்றி எண்ணிப் பார்க்கையில், இதுதான் தங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் எனக் கருதுவார்கள்” என்றார் டிரம்ப்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)