இலவச அமரர் ஊர்தி சேவையை நடத்தும் முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்

இலவச அமரர் ஊர்தி சேவையை நடத்தும் முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் அதிகளவிலான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பமொன்றில் மரணமொன்று நேரும் பட்சத்தில், அதற்கான பொறுப்பை ஏற்று, இறுதி ஊர்வலத்தை நடத்தும் பொறுப்பை முல்லைத்தீவில் வாழும் ரூபன் நடத்தி வருகின்றார். இவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்.

வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது அமரர் ஊர்தி சேவையாக இந்த சேவை காணப்படுகின்றது. வறுமைகோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களில் மரணிப்பவர்களை, கொண்டு செல்லும் வகையில் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: