லீப் ஆண்டில் திருமணத்தையே தவிர்க்கும் மக்கள் - எங்கே தெரியுமா?

காணொளிக் குறிப்பு, லீப் ஆண்டுடன் தொடர்புடைய மூடநம்பிக்கைகளும் பாரம்பரியங்களும் பல்வேறு நாடுகளில் உள்ளன.
லீப் ஆண்டில் திருமணத்தையே தவிர்க்கும் மக்கள் - எங்கே தெரியுமா?

பிப்ரவரி மாதத்தில் இந்த ஆண்டு 29 நாட்கள். இதனால் நமது காலண்டரில் கூடுதலாக ஒரு நாள் சேர்க்கப்படுகிறது. வழக்கமான 365 நாட்கள் அல்லாமல் 366 நாட்களுடன் ஆங்கில நாள்காட்டியில் இருக்கும் ஆண்டு, லீப் ஆண்டு (Leap Year) என்று அழைக்கப்படும் மிகுநாள் ஆண்டாக இருக்கும்.

2024-ம் ஆண்டு மிகு நாள் ஆண்டு ஆகும். பிப்ரவரி 29ஆம் தேதி மிகு நாள் (லீப் நாள்) என்று அழைக்கப்படுகிறது. பல நாடுகளில் மூட நம்பிக்கைகளும் கலாசார பாரம்பரியங்களும் இந்த நாளுடன் தொடர்புடையதாக இருக்கின்றன.

பிப்ரவரி 29-ஐ திருமணமாகாத ஆண்களுக்கான தினமாக குறிப்பிடுகிறார்கள். அயர்லாந்து நாட்டு பாரம்பரியத்தின்படி, பெண்கள் ஆண்களிடம் திருமண விருப்பத்தைத் தெரிவிக்கலாம். இது மிகுநாளில் நடைபெறும்.

கிரேக்க நாட்டில், மிகுநாள் ஆண்டில் திருமணம் செய்து கொள்ளப்படுவது தவிர்க்கப்படுகிறது. அதுவும் குறிப்பாக, மிகுநாளில். மிகுநாள் ஆண்டில் செய்யப்படும் திருமணம் முறிந்துவிடும் என்று அங்கு நம்பப்படுகிறது.

ஸ்காட்லாந்து நாட்டில், மிகுநாளில் தீங்கு விளைவிக்கும் மந்திரவாதிகள் ஒன்று கூடுவதாக நம்பப்படும் பாரம்பரியம் உள்ளது.பிப்ரவரி 29ஆம் தேதி குழந்தை பிறப்பதையும் துர்நிகழ்வாக ஸ்காட்லாந்து மக்கள் சிலர் கருதுகின்றனர்.

ஆனால் சில கலாசாரங்களின்படி, மிகுநாள் ஆண்டை அதிர்ஷ்டமானதாக பார்ப்பதும் உண்டு. சில ஜோதிடர்கள், உங்கள் பிறந்த நாள் மிகுநாளாக இருந்தால், நீங்கள் பல சிறப்பான திறமைகள் கொண்டவராக இருப்பீர்கள் என்று நம்புகிறார்கள்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)