இந்தி கற்க விரும்பியதால் கேலி செய்யப்பட்டேன் - நிர்மலா சீதாராமன்
"தமிழ்நாட்டில் நான் இந்தி கற்க சென்றபோது என்னை கேலி செய்தார்கள்" என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் டிசம்பர் 3-ஆம் தேதியான நேற்று வங்கிகள் திருத்தச்சட்ட மசோதா மீதான விவாதத்தின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலுரை வழங்கினார்.
அப்போது இந்தியில் இருந்த அவரது உரையில் குறைகள் இருப்பதாக இந்தியா கூட்டணி எம்பிக்கள் சுட்டிக்காட்டினர். இதற்கு, 'தமிழ்நாட்டில் இந்தி கற்க எங்களை அனுமதிக்காதது அவர்கள் தான் என தமிழ்நாட்டு எம்பிக்களை சுட்டிக்காட்டினார். இதற்கு தமிழ்நாட்டு எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, தமிழ்நாட்டில் இந்தி மொழி கற்க சென்ற போது தான் கேலி செய்யப்பட்டேன் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



