மகாராஷ்டிரா அருவியில் அடித்துச்செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் - காணொளி

காணொளிக் குறிப்பு, மஹாராஷ்டிராவின் புஷி அணை நீர்வீழ்ச்சியில், 5 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்.
மகாராஷ்டிரா அருவியில் அடித்துச்செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் - காணொளி

மகாராஷ்டிராவின் லோனாவாலாவில் உள்ள புஷி அணை நீர்வீழ்ச்சியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதற்கு பிந்தைய காட்சிகள் சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் பிபிசி அவற்றை காண்பிக்கவில்லை

வெள்ளத்தில் சிக்கிய 10 பேரில் 5 பேர் மீட்கப்பட்டனர். 5 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்.

அவர்களில் 4 பேர் புனேவைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் ஆக்ராவில் இருந்து வந்துள்ளனர்.

“அவர்கள் நீரில் இறங்கும்போது மழை பெய்யவில்லை. தண்ணீர் அளவும் குறைவாக இருந்தது. திடீரென கனமழை பெய்தது. தண்ணீரின் அளவும் அதிகரித்தது. அனைவரும் அடித்து செல்லப்பட்டனர்,” என்கிறார் அவர்களது உறவினர் சோஹல் சைத்.

அறிமுகம் இல்லாத பகுதிக்கு மழைக் காலங்களில் பயணம் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்துகிறது.

“தண்ணீரைப் பற்றி சுற்றுலா பயணிகளுக்குத் தெரியாது. உங்களுக்கு அறிமுகம் இல்லாத பகுதிகளுக்கு செல்லாதீர்கள். வாழ்க்கையை பணையம் வைக்க வேண்டாம்,” என்று அறிவுறுத்துகிறார், சிவதுருக் மீட்புப் படையின் செயலாளர் ஆனந்த் கௌடே.

மகாராஷ்டிராவின் லோனாவாலாவில் உள்ள புஷி அணை நீர்வீழ்ச்சி

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)