நொறுங்கிக் கிடக்கும் வீடுகளைக் கண்டு காஸா மக்கள் வேதனை

நொறுங்கிக் கிடக்கும் வீடுகளைக் கண்டு காஸா மக்கள் வேதனை

இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடைநிறுத்தத்திற்கு பிறகு, தங்களது வீடுகளைப் பார்க்க சென்றனர் காஸா பகுதி மக்கள். காஸாவின் தெற்குப் பகுதியில் வசிக்கும் வேய்ல் குடெய், தனது வீடு முழுமையாக சேதமடைந்திருப்பதைக் கண்டு வருத்தம் தெரிவித்தார்.

தன்னுடைய குழுந்தைகளுக்காக கட்டப்பட்ட வீடு முழுமையாக சேதமடைந்திருப்பதால், தாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பதாக அவர் கூறினார். மேலும், காஸாவில் தற்போது நடந்து வருவது போர் அல்ல, அது ஒரு இனப்படுகொலை என்றார் வேய்ல் குடெய்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)