'உதவி கிடைக்காவிட்டால் இந்த மக்கள் இறந்துவிடுவார்கள்' - சூடானில் என்ன நடக்கிறது?
'உதவி கிடைக்காவிட்டால் இந்த மக்கள் இறந்துவிடுவார்கள்' - சூடானில் என்ன நடக்கிறது?
'துரித ஆதரவுப் படைகளின்' தாக்குதல்களால், பல்லாயிரக்கணக்கான சூடானியர்கள் வடக்கு டாஃபுவாவின் ஜாம்சாம், அபு ஷோக் அகதிகள் முகாம்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
முகாம்களில் இருந்து தப்பியவர்கள் பலர், ஸம்ஸமில் இருந்து 60 கிமீ தொலைவில் உள்ள தவிலாவை அடைந்தனர்.
"அவர்களிடம் எதுவும் இல்லை. அவர்கள் அணிந்திருக்கும் உடைகளைத் தவிர. தண்ணீர் வசதி இல்லை, கழிப்பறை இல்லை, தங்குமிடம் இல்லை. இங்கு வரும் மக்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது" என்கிறார் எம்எஸ்ஃஎப் ஒருங்கிணைப்பாளர், மரியன் ராம்ஸ்டீன்.
"தண்ணீரும் இல்லை, உணவும் இல்லை. எனவே மனிதநேய அமைப்புகள் உதவிக்கான முயற்சிகளை ஒருங்கிணைக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். இல்லையென்றால் இந்த மக்கள் ஏதோ ஒரு கண்காணாத இடத்தில் உயிரிழக்க நேரிடும்." என்கிறார் அவர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



