இந்தியா: ஒரே நாடு ஒரே தேர்தலில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள் என்ன?

காணொளிக் குறிப்பு,
இந்தியா: ஒரே நாடு ஒரே தேர்தலில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள் என்ன?

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை புதன்கிழமை அன்று ஏற்றுக்கொண்டது.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டிருந்தது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேர்தல் சீர்திருத்தங்களுக்கான ஒரு பெரிய நடவடிக்கை என்று மத்திய அரசு கூறுகிறது.

குழுவின் பரிந்துரைகளின் படி இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த இரண்டு முக்கிய அரசியலமைப்பு திருத்தங்கள் தேவைப்படும்.

இதன்கீழ் அரசியலமைப்பின் 83 மற்றும் 172-வது பிரிவில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். ஆனால், தற்போதைய மக்களவையில் பா.ஜ.கவுக்கு 240 இடங்கள் மட்டுமே உள்ளது.

பெரும்பான்மைக்கு மோதி அரசுக்கு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவை. எனவே இது அரசுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)