You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா - பாகிஸ்தான் மோதலில் யாருக்கு உண்மையில் அதிக சேதம்? - ஓர் அலசல்
இந்தியா, பாகிஸ்தான் இடையிலான மோதல் நான்கு நாட்கள் நீடித்தது. மே 6 மற்றும் 7-க்கு இடைப்பட்ட இரவில் மேற்கொள்ளப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் கீழ், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மொத்தம் ஒன்பது இடங்கள் தாக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மறுபுறம், பாகிஸ்தான் இதைப் போர் நடவடிக்கை என்று கூறி, பதிலடி கொடுக்க தங்களுக்கு முழு உரிமை உண்டு என்று கூறியது.
நான்கு நாட்கள் நீடித்த இந்த மோதலில் யாருக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பது குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) 'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பாக ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. அதன்படி, ஒன்பது பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன, 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். யூசுப் அசார், அப்துல் மாலிக் ரவூப் போன்ற முக்கிய பயங்கரவாத தளபதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் விமானப்படையின் 20% சொத்துக்கள் அழிக்கப்பட்டன
போலாரி விமானப்படைத் தளம் பலத்த சேதத்தை சந்தித்தது மற்றும் படைத் தலைவர் உஸ்மான் யூசுப் கொல்லப்பட்டார்.
மறுபுறம், பாகிஸ்தான் விமானப்படை மூன்று ரஃபேல் விமானங்கள் உட்பட இந்தியாவின் ஐந்து போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும், தாக்குதல் நடந்த இரவில் 70க்கும் மேற்பட்ட ட்ரோன்களை குறிவைத்ததாக பாகிஸ்தான் கூறியது. இருப்பினும், இந்தியாவின் ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி பாகிஸ்தானின் கூற்று, குறிப்பாக ரஃபேல் குறித்து எந்த தெளிவான பதிலையும் அளிக்கவில்லை.
யாருக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பது குறித்து விரிவாக இந்த காணொளியில் பார்க்கலாம்.