எடப்பாடி பழனிசாமி vs அண்ணாமலை: கூட்டணி ஆட்சியா? இல்லையா?

எடப்பாடி பழனிசாமி vs அண்ணாமலை: கூட்டணி ஆட்சியா? இல்லையா?

கூட்டணி ஆட்சி குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பாஜகவின் முன்னாள் தலைவர் கே அண்ணாமலையும் இடையே தொடர்ந்து கருத்துகளை கூறிவருகின்றனர்.

ஜூலை 16 அன்று பேசிய எடப்பாடி பழனிசாமி, கூட்டணிக்கு தலைமை தாங்குவது 'நான் தான்' என்றும் பிறகு யார் முதலமைச்சர் ஆவார் என்றும் செய்தியாளர் சந்திப்பில் பேசியிருந்தார்.

கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை வகிப்பதாக அவர் கூறினார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, இன்றைக்கு தமிழகத்தில் எல்லா கட்சிகளும் கூட்டணி ஆட்சி குறித்து பேச ஆரம்பித்திருப்பதாக தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு