'மகப்பேறுகால பராமரிப்பில் இலங்கை கணிசமான முன்னேற்றம்'
மகப்பேறு கால இறப்புகள் மற்றும் ஐந்து வயது வரையிலான குழந்தைகளின் இறப்பு ஆகிய விடயங்களில் இலங்கை கடந்த 15 ஆண்டுகளின் கணிசமான முன்னேற்றத்தை கண்டுள்ளதாக ஐநாவின் இலங்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறுகின்றது.
குறிப்பாக இந்த விடயங்களில் இலங்கை ஐநாவின் புத்தாயிரம் ஆண்டுக்கான வளர்ச்சி இலக்குகளை கிட்டத்தட்ட எட்டியுள்ளதாகவும் ஐநாவின் அறிக்கை கூறுகின்றது.
அதிகரித்துவரும் பேறுகால மருத்துவ பராமரிப்பும், தொற்று நோய்களுக்கான தடுப்பு மருந்து வசதிகளும் இந்த இறப்பு வீதங்களை குறைத்துள்ளதாக கூறும் ஐநா, அந்த 15 வருடகாலங்களில் இலங்கை இந்த விடயங்களில் மூன்று மடங்கு முன்னேற்றத்தை கண்டுள்ளதாக கூறுகின்றது.
இவை குறித்து இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருக்கும் மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் மருத்துவ நிபுணரான டாக்டர் ஆர் . பிரதாபனின் செவ்வியை இங்கு கேட்கலாம்.