பிபிசி சிறந்த பாரா விளையாட்டு வீராங்கனை 2022 விருதை வென்றார் பவினா படேல்
இந்த வருடம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பிபிசி பாரா ஸ்போர்ட்ஸ்வுமன் ஆஃப் தி இயருக்கான விருதை பவினா படேல் பெற்றார்.
பாரா டேபிள் டென்னிஸ் வீராங்கனையான பவினா 2020ஆம் ஆண்டு டோக்யோவில் நடைபெற்ற கோடைகால பாராலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார் அவர். 2022ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் படேல் தங்கம் வென்றார்.
விருது குறித்து பவினா பட்டேல் பேசுகையில், "பெண்களை குறிப்பாக விளையாட்டுத் துறையில் பெண்களை ஊக்குவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட இந்த அற்புதமான முயற்சியின் ஒரு அங்கமாக இந்த மதிப்புமிக்க விருதை பெறுவதில் மகிழ்ச்சியாக உணருகிறேன். அதேபோல பிபிசி பாரா விளையாட்டுகளிலும் கவனம் செலுத்தி, இந்திய விளையாட்டுத் துறையை அனைவரையும் உள்ளடக்கியதாக மாற்றுவது பாராட்டிற்குரியது."
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்