ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டிகளில் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக்

காணொளிக் குறிப்பு, ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டிகளில் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக்

ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டிகளில் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் மட்டுமே. இந்தச் சாதனை எல்லாம் சிறு கனவில் இருந்துதான் உருவானது.

2016 ரியோ ஒலிம்பிக்கில் 58 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார் சாக்ஷி. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நான்காவது இந்தியப் பெண் இவர். சாக்ஷி எப்போதும் விளையாட்டில் ஆர்வமாக இருந்தார்.

அவருடைய தாத்தாவும் ஒரு மல்யுத்த வீரர் என்பதை அறிந்ததும் உத்வேகம் கொண்டார். அவர் பதக்கம் வென்ற ரியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு, சாக்ஷியின் விளையாட்டு வாழ்க்கை பின்னடைவை சந்தித்தது.

ஆனால், அவர் 2022இல் பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று அசத்தலான மறுபிரவேசத்தை நிகழ்த்தினார். சாக்ஷி மாலிக், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார்.

செய்தியாளர் - வந்தனா

ஒளிப்பதிவு - கென்ஸ் உல் முனீர் & சந்தீப் யாதவ்

படத்தொகுப்பு - கென்ஸ் உல் முனீர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: