விராட் கோலி - சூர்யகுமார் காம்போ: வெற்றி பெற்ற இந்திய அணி

காணொளிக் குறிப்பு, விராட் கோலி - சூர்யகுமார் காம்போ: வெற்றி பெற்ற இந்திய அணி

பாகிஸ்தானுக்கு எதிராக ஓர் மறக்க முடியாத ஆட்டத்தை விளையாடிய விராட் கோலி எனும் ரன் மெஷின் இன்னமும் அதே ஃபார்மில் களமாடி வருவது ரசிகர்களை உற்சாக மூட்டியிருக்கிறது.

டி20 உலக கோப்பையில் அதிக ரன்களை குவித்த வீரர் எனும் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்லை பின்னுக்குத் தள்ளி 2ம் இடம் பிடித்துள்ளார் விராட் கோலி.

இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதிய டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 ஆட்டம் ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. கே.எல்.ராகுல் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

ரோஹித் சர்மா 39 பந்துகளை எதிர்கொண்டு 53 ரன்கள் சேர்த்தார். குறிப்பாக இந்திய அணி முதல் 6 ஓவர்களில் 32 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 179 ரன்கள் சேர்த்தது. நெதர்லாந்து அணி 123 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: