மனதை குளிர்விக்கும் குளிர்கால ஒலிம்பிக்ஸ் தருணங்கள்

வரும் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளை முன்னிட்டு, சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் அதிகாரபூர்வ புகைப்பட முகமையான கெட்டி இமேஜஸ்-இன் கோப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, முந்தைய குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பு.

2010-இல் கனடாவில் உள்ள வான்கூவர் நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்ஸின் தொடக்க விழாவில் கனட பனிச்சறுக்கு வீரர் ஜானி லியால், ஒலிம்பிக் வளையங்களின் வழியே தாண்டிச் செல்லும் காட்சி.

பட மூலாதாரம், Heinz Kluetmeier/ Getty Images

படக்குறிப்பு, 2010-இல் கனடாவில் உள்ள வான்கூவர் நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்ஸின் தொடக்க விழாவில் கனட பனிச்சறுக்கு வீரர் ஜானி லியால், ஒலிம்பிக் வளையங்களின் வழியே தாண்டிச் செல்லும் காட்சி.
1980-இல் நடந்த போட்டிகளின் ஐஸ் ஹாக்கியின் அரை இறுதிப் போட்டியில் சோவியத் யூனியன் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வென்றதைக் கொண்டாடும் அமெரிக்க அணி. நியூயார்க்கில் நடைபெற்ற இந்தப் போட்டி 'பனி மீது நடந்த அதிசயம்' என்று கூறப்பட்டது. இறுதிப்போட்டியில் அமெரிக்கா பின்லாந்து அணியை 4-2 என்று வென்றது.

பட மூலாதாரம், B Bennett/ Getty Images

படக்குறிப்பு, 1980-இல் நடந்த போட்டிகளின் ஐஸ் ஹாக்கியின் அரை இறுதிப் போட்டியில் சோவியத் யூனியன் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வென்றதைக் கொண்டாடும் அமெரிக்க அணி. நியூயார்க்கில் நடைபெற்ற இந்தப் போட்டி 'பனி மீது நடந்த அதிசயம்' என்று கூறப்பட்டது. இறுதிப்போட்டியில் அமெரிக்கா பின்லாந்து அணியை 4-2 என்று வென்றது.
2014-இல் நடந்த சோச்சி குளிர்கால ஒலிம்பிக்ஸில், அமெரிக்க ஸ்கீயிங் வீராங்கனை எமிலி குக் இறுதிப்போட்டிக்கு பயிற்சி செய்துகொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட படம்.

பட மூலாதாரம், Cameron Spencer/ Getty Images

படக்குறிப்பு, 2014-இல் நடந்த சோச்சி குளிர்கால ஒலிம்பிக்ஸில், அமெரிக்க ஸ்கீயிங் வீராங்கனை எமிலி குக் இறுதிப்போட்டிக்கு பயிற்சி செய்துகொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட படம்.
யுகோஸ்லேவியாவில் 1984-இல் நடந்த போட்டிகளில் பிரிதனைச் சேர்ந்த பனி நடனக் கலைஞர்கள் ஜேய்ன் டார்வில் மற்றும் கிறிஸ்டோஃபர் டீன் நிகழ்த்தும் பொலேரோ நடனம்.

பட மூலாதாரம், Trevor Jones/ Getty Images

படக்குறிப்பு, யுகோஸ்லேவியாவில் 1984-இல் நடந்த போட்டிகளில் பிரிதனைச் சேர்ந்த பனி நடனக் கலைஞர்கள் ஜேய்ன் டார்வில் மற்றும் கிறிஸ்டோஃபர் டீன் நிகழ்த்தும் பொலேரோ நடனம்.
2010-இல் நடந்த வான்கூவர் குளிர்கால ஒலிம்பிக்சில், பெண்களுக்கான 500 மீட்டர் ஸ்கேடிங்கில் அமெரிக்காவின் எல்லி ஒச்சோவிக்ஸ் உடன் போட்டியிடும் கனட வீராங்கனை ஷன்னான் ரம்பெல்.

பட மூலாதாரம், Jamie Squire/ Getty Images

படக்குறிப்பு, 2010-இல் நடந்த வான்கூவர் குளிர்கால ஒலிம்பிக்சில், பெண்களுக்கான 500 மீட்டர் ஸ்கேடிங்கில் அமெரிக்காவின் எல்லி ஒச்சோவிக்ஸ் உடன் போட்டியிடும் கனட வீராங்கனை ஷன்னான் ரம்பெல்.
1988 குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியில், போப்ஸ்லேக் ஃபோர்ஸ் எனப்படும் பனி விளையாட்டின்போது, ஜமைக்க வீரர்கள் டேவன் ஹாரிஸ், டட்லீ ஸ்டோக்ஸ், மைக்கேல் வைட், சாமுவேல் கிளேட்டன் ஆகியோர் பனிச் சறுக்கு தலத்தில் இருந்து விலகி பக்கவாட்டில் இருந்த தடுப்புகளில் மோதிய காட்சி.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1988 குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியில், போப்ஸ்லேக் ஃபோர்ஸ் எனப்படும் பனி விளையாட்டின்போது, ஜமைக்க வீரர்கள் டேவன் ஹாரிஸ், டட்லீ ஸ்டோக்ஸ், மைக்கேல் வைட், சாமுவேல் கிளேட்டன் ஆகியோர் பனிச் சறுக்கு தலத்தில் இருந்து விலகி பக்கவாட்டில் இருந்த தடுப்புகளில் மோதிய காட்சி.
1992-இல் பிரான்சில் நடந்த போட்டிகளின்போது ஸ்கீயிங் செய்யும் வீரர் காற்றில் இருக்கும்போது எடுக்கப்பட்ட படம்.

பட மூலாதாரம், Pascal Rondeau/ Getty Images

படக்குறிப்பு, 1992-இல் பிரான்சில் நடந்த போட்டிகளின்போது ஸ்கீயிங் செய்யும் வீரர் காற்றில் இருக்கும்போது எடுக்கப்பட்ட படம்.
1998-இல் ஜப்பானில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியில், டவுன்ஹில் எனப்படும் போட்டியில் எதிர்பாராமல் கீழே விழுந்து தன் காலை முறித்துக் கொள்வதற்கு சில நொடிகளுக்கு முன்னர் ஜெர்மன் வீரர் அலெக்ஸ்சாண்டர் ஸ்பிட்ஸ்.

பட மூலாதாரம், Alex Livesey/ Getty Images

படக்குறிப்பு, 1998-இல் ஜப்பானில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியில், டவுன்ஹில் எனப்படும் போட்டியில் எதிர்பாராமல் கீழே விழுந்து தன் காலை முறித்துக் கொள்வதற்கு சில நொடிகளுக்கு முன்னர் ஜெர்மன் வீரர் அலெக்ஸ்சாண்டர் ஸ்பிட்ஸ்.
1964-இல், ஆஸ்திரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியைக் காணும் 80,000 பார்வையாளர்கள்.

பட மூலாதாரம், Central Press/ Getty Images

படக்குறிப்பு, 1964-இல், ஆஸ்திரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியைக் காணும் 80,000 பார்வையாளர்கள்.
2010-இல் நடந்த குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியில் துப்பாக்கி சுடும் பிரிவில் பங்கேற்கும் நார்வே வீரர் ஓல் எய்னார் ஜோர்தலென்.

பட மூலாதாரம், Shaun Botterill/ Getty Images

படக்குறிப்பு, 2010-இல் நடந்த குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியில் துப்பாக்கி சுடும் பிரிவில் பங்கேற்கும் நார்வே வீரர் ஓல் எய்னார் ஜோர்தலென்.
ரஷ்யாவில் 2014-இல் நடந்த போட்டிக்கான ஒலிம்பிக் தீபம் போல்சோய் பனி குவிமாடம் மீது எரியும் காட்சி.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஷ்யாவில் 2014-இல் நடந்த போட்டிக்கான ஒலிம்பிக் தீபம் போல்சோய் பனி குவிமாடம் மீது எரியும் காட்சி.