குழந்தையின் ரத்தப் புற்றுநோயை குணப்படுத்திய 'அற்புதம்'

புரட்சிகரமான நவீன மரபணு மாற்று சிகிச்சை முறையொன்றின் மூலம் லண்டனில் உள்ள மருத்துவர்கள் குழந்தை ஒன்றை ரத்தப் புற்றுநோயிலிருந்து காப்பாற்றியுள்ளனர்.

இதனை ஓர் அற்புதம் என்று மருத்துவர்களே வியக்கின்றனர்.

மூன்று மாதக் குழந்தையாக இருக்கும்போதே, லைலாவுக்கு லுக்கேமியா (leukaemia) நோயின் மோசமான வகையொன்று ஏற்பட்டது

சோதனை முயற்சியாக நடந்த, மிகவும் சிக்கலான சிகிச்சை ஒன்றே அந்தக் குழந்தைக்கு அளிக்கப்பட்டிருந்தது.