மனிதக் கருவில் மரபணு ஆராய்ச்சிக்கு அனுமதி கோரும் விஞ்ஞானிகள்

ஆரம்பகட்ட மனிதக் கருக்களில் மரபணு மாற்றம் செய்யும் ஆராய்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று கோரியுள்ளது.

அது நடந்தால் மரபணு நோய்களுக்கு புதிய சிகிச்சைகளைக் கண்டுபிடிப்பதில் மாபெரும் முன்னேற்றம் ஏற்படும் என ஹிங்ஸ்டன் குழு வாதிட்டுள்ளது.

ஆனால் மனிதக் கரு மரபணு மாற்றம் சர்ச்சைக்குரிய விடயமாகவே இருந்துவருகிறது.