எளிதில் பார்க்க முடியாத பல அறிவியல் காட்சிகள் குறித்த பல படங்கள்.
படக்குறிப்பு, இந்த ஆண்டிற்கான வெல்கம் புகைப்பட விருதுகளுக்குப் போட்டியிட்டு இறுதிச் சுற்றில் போட்டிக்கு வந்த படங்கள் சில. ( இங்கே படத்தில் ஒரு முடியின் மீது ஒட்டிக்கொண்டிருக்கும் பேனின் முட்டை)
படக்குறிப்பு, பழுப்பு நிற, நீண்ட காதுகளைக் கொண்ட வௌவால் இது ஒரு எக்ஸ் ரே படம்.
படக்குறிப்பு, வெற்றி பெற்ற 18 படங்கள் 7 நடுவர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்தப் படத்தில் மனித இதயத்தின் அயோர்டிக் வால்வின் திசுவில், கால்சியம் அடைத்துகொண்டிருக்கும் காட்சி
படக்குறிப்பு, வெறும் அறிவியல் தகவலைத் தந்தால் மட்டும் போதாது, புகைப்படங்களில் அழகும் இருக்கவேண்டும் என்பது ஒரு விதி. இந்தப் படத்தில் காணப்படுவது ஸீப்ரா மீனின் கரு.
படக்குறிப்பு, தோரக்ஸ் என்ற தலைக்கும் வயிற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் இதயம் ரத்தத்தை வெளியேற்றும் காட்சி
படக்குறிப்பு, ஆக்ஸிடைஸ் செய்யப்பட்ட விட்டமின் சி கட்டிகள்
படக்குறிப்பு, அரபிடொப்சிஸ் தலியானா என்ற ஒரு வகைப் பூவின் நெருக்கமான காட்சி
படக்குறிப்பு, எல்லாக் காலத்திலும் வளரும் அஸ்ட்ராண்டியாஸ் என்ற ஒருவகைத் தாவரத்தின் படம்.
படக்குறிப்பு, சிறுநீரகத்தில் ஏற்படும் கல்லைக் காட்டும் ஸ்கேன் படம் -- அபெர்டீன் பல்கலைக்கழகத்தின் கெவின் மக்கென்ஸி எடுத்த படம் இது.
படக்குறிப்பு, அடித்தாடை எலும்பு
படக்குறிப்பு, மார்பகப் புற்றுநோய் செல்கள் மிக நுண்ணிய அளவிலான மருந்தேற்றிகள் மூலம் சிகிச்சைக்குள்ளாவதைக் காட்டும் படம்
படக்குறிப்பு, ஒரு ஆரோக்கியமான மனித மூளையில் உள்ள நரம்பு இழைகளைக் காட்டும் இந்த அழகான படத்தை எம்.ஆர்.ஐ படமாக எடுத்தவர் எம்.ஐ.டியின் மக்கவர்ன் நிறுவனத்தின் ஸெய்னெப் எம்.சேய்கின்
படக்குறிப்பு, தோலில் புதைந்திருக்கும் சிறிய ஒரு ஜந்து --மான் பேன் ( டீயர் டிக்) என்று சொல்வார்கள்.
படக்குறிப்பு, மார்ச் 12ம் தேதியிலிருந்து கிளாஸ்கோ நகரின் அறிவியல் மையத்தில் இந்தக் கண்காட்சி ஒரு சில நாட்களுக்கு மற்றும் நடைபெறுகிறது. படத்தில் லகேனா உயிரினங்கள்