உங்கள் தலைக்கு எப்படி பேன் வருகிறது தெரியுமா? (காணொளி)
உங்கள் தலைக்கு பேன் ஏன் வருகிறது? எப்படி வருகிறது? உங்கள் ஸ்மார்ட்போன் உங்களுக்கு பேன் வர காரணமாக இருக்கிறது. அது எப்படி? இது குறித்த பல சந்தேகங்களுக்கு விடையளிக்கும் இக்காணொளியை பாருங்கள்.
உங்கள் தலையில் பேன் எவ்வாறுவருகிறது என்று தெரியுமா?
பிறர் தலையோடு உங்கள் தலை ஒட்டி இருப்பது பொருட்டு தலையில் பேன் உருவாகிறது.
சிறு வயது நபர்கள், ஒருவரோடு ஒருவர் தலையை நெருக்கமாக வைக்கும்போது பேன் உருவாகிறது.
நீண்ட கூந்தல் இருந்தாலும் இந்த பிரச்சனை வரும். குறிப்பாக, கூந்தலை இறுக்கமாக கட்டாத பொழுதுகளில் வரும்.
எனவேதான் குழந்தைகளுக்கு தலையில் அதிகப்படியான பேன் வருகிறது.
அதிகம் பேர் கொண்ட குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் இந்த பிரச்சனை வரும்.
பதின்ம வயது நபர்கள் அதிகமாக ஸ்மாட் ஃபோன்களை உபயோகித்தாலும் பேன்கள் வரும் வாய்ப்புள்ளது. ஃபோன்கள் மூலம் அல்ல, அலைப்பேசியை பார்க்க ஒருவரோடு ஒருவர் தலையை ஒன்றாக வைப்பதனால் இந்த பிரச்சனை வரும்.
நீண்ட கூந்தல் இருந்தாலும் இந்த பிரச்சனை வரும். நம் தலையில் பேன் இருப்பது நமக்கு தெரிவதற்கும் முன்னரே அதை பிறருக்கு பரப்ப முடியும். உங்களுக்கு உடனடியாக அறிகுறிகள் தெரியாது மாறாக ஒவ்வாமை போன்ற உணர்வு ஏற்படும்.
மனித தலைமுடியின் வேர்கால்களை விட்டு சிறிது நேரம் மட்டுமே பேன்களால் உயிர் வாழ முடியும். எனவே பூனைகள், நாய்களுக்கு தலைப்பேன் இருப்பதில்லை. விலங்குகளிடமிருந்து வருவதில்லை. பேன்களை அகற்றும் சீப்பு மற்றும்சிகிச்சைகள் உங்களுக்கு பேன் தொல்லையிலிருந்து விடுதலை அளிக்கலாம். உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்