உலக மனசாட்சியை உலுக்கிய சிறுவனின் மரணம்
ஓராண்டுக்கு முன் தன் குடும்பத்துடன் சிரியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு தப்பிவந்த வழியில் கடலில் மூழ்கி இறந்த அலன் குர்தி என்னும் சிறுவனின் தந்தை குடியேறிகளுக்கான வாசலை ஐரோப்பா திறந்துவைக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
சிரியாவின் போரை உலகத் தலைவர்கள் முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என தான் இன்னமும் எதிர்பார்ப்பதாக அப்துல்லா குர்தி பிபிசியிடம் கூறினார்.
துருக்கி கடற்கரையில் ஒதுங்கிய அலன் குர்தியின் சடலம் அப்போது அகதிகள் நெருக்கடி குறித்து உலக கவனத்தை ஈர்த்தது.
இவை குறித்த பிபிசியின் காணொளி. (இதில் சில காட்சிகள் மனதுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.)